1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (12:00 IST)

வரலாறு காணாத சாதனை..! சர்கார் ரிலீஸ்: 80 நாடுகள், 3000 தியேட்டர்ஸ்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி  விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் 80 நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக ஹவாய் தீவில் வெளியாகும் முதல் தமிழ் படம் தளபதியின் சர்கார் தான் 
 
 தீபாவளி ரேசில் தற்போது சர்கார் மட்டுமே திரையரங்குகளில் தனது ஆக்கிரமிப்பை செலுத்த உள்ளது. 5 கண்டங்களில் 80 நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுவது உறுதியாகியுள்ளது.
 
விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிக வசூலைக் குவித்த படம் என்றால், அது கடந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல்தான். ஆனால் சர்கார் படம் மெர்சலையும் மிரட்டியடித்து ரிலீசுக்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. 
 
விஜய் நடிக்கும் முழு நீள அரசியல் படமான இது அவரது சினிமா பயணத்தில் புதிய மைல்கல்லாக அமையும் என்பதே ரசிகர்களின் இவ்வளவு எதிரிபார்ப்புகளுக்கு காரணம்.