1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (15:14 IST)

ஜானு என் உண்மை காதலி...! அப்போ 96-ம் திருட்டு கதையா...?

ஒருவழியாக தளபதி விஜய்யின் சர்கார் கதை திருட்டு சம்பவம் சமரச முடிவடைந்ததையடுத்து, தற்போது  96 படத்தின் மீதும் கதை திருட்டு புகார் பாய்ந்துள்ளது.ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, திரிஷா நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 96 படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. 
 
இந்நிலையில் தற்போது இந்தக் கதை இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் சுரேஷ் என்பவருடையது என சர்ச்சை கிளம்பியுள்ளது.  இது பற்றி பாரதிராஜாவும், சுரேஷும் முன்னணி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். 
 
"இந்தக் கதையை 2012-ல் சுரேஷ் என்னிடம் சொன்னார்.அது வாழ்க்கையில் நடந்த உண்மை கதை. சுரேஷ் பள்ளி பருவத்தில் காதலித்த அந்த பெண்ணைப் பற்றிய கதை. தஞ்சாவூர் பின்னணியில் வித்தியாசமான காதல் கதையாக அது இருந்தது. சுரேஷின் அந்தக் கதையை நானே தயாரித்து இயக்குவதாக முவாக்கு கொடுத்தேன். பிறகு ஓம் படத்தின் வேலைகளில் நான் பரபரப்பாகிவிட்டேன்.
 
96 பட போஸ்டரைப் பார்த்ததும் சிலர், என்ன சார் நம்ம சுரேஷ் கதையை படமா எடுத்துட்டாங்க சொன்னாங்க. பிறகு படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், சுரேஷ் என்னிடம் என்ன சொன்னாரோ அவைகள் காட்சிகளாகவே 90 சதவீதம் 96 படத்தில் இருக்கிறது என பாரதி ராஜ கூறியுள்ளார் . 
 
சுரேஷ் கூயாவது, "இந்த கதைக்கு 92 என முதலில் பெயர் வைத்தேன். காரணம் அப்போது நான் 12-ம் வகுப்பு படிக்கும் போது நடந்து தான் அந்த கதை. பிறகு எனது இயக்குநரின் பெயரிலேயே டைட்டில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு, பாரதி என்கிற பால்பாண்டி என டைட்டில் வைத்தோம். ஜானகி என்று தான் ஹீரோயினுக்கு பெயர் வைத்தோம். காரணம் என்னுடைய பெண் தோழியின் பெயர் நிஜமாவே ஜானகி தான். பாடகி ஜானகியின் பாடல்களைத்தான் அவர் பாடுவார். யமுனை ஆற்றிலே பாடலை பாட சொல்லி தவம் கிடந்தது நான் தான்" என மனமுடைந்து பேசியிருக்கிறார். 
 
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் கதை திருட்டு சம்பவத்தால், சினிமாவில் சாதிப்பதே தனது கனவு என்று வாழக்கையை தொலைத்து இலட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் உதவி இயக்குனர்களின் வழக்கை இன்னும் கேள்வி குறியாகவே உள்ளது.