வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (10:50 IST)

சர்கார் ஆன்லைன் புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்கவுள்ளது.நாளை முதல் சர்கார் படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 
 
ஒரு வழியாக திருட்டு கதை விவகாரத்தில் இருந்து பெருமூச்சு விட்ட சர்கார் ரிலீஸுக்கு  தயாராகிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறே  குறித்த நேரத்தில் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை வந்துள்ளது .
 
படத்தின் புரொமோஷன் வேளைகளில் தீவிரம் காட்டிவந்த படக்குழுவினர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் விற்பனை தமிழகத்தில் நாளை தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.