1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Junior Artistes Given the warning AR. Muragadoss....!

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஏ.ஆர். முருகதாஸ்..!

ஏ.ஆர்.முருகதாஸ்
கடுமையான உழைப்பில்  ‘சர்கார்’ படத்தை உருவாக்கியுள்ளோம்.  ஜூனியர் ஆர்ட்டிஸ்டகள் எங்கள் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ’சர்கார்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், ’சர்கார்’ படக்குழுவினருக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, சர்கார் படத்தில்  கடுமையான உழைப்பு இருக்கிறது. சில ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் தங்களின் அனுமதியில்லாமல் நியாயமற்ற முறையில் படத்தை குறித்து பேட்டி அளித்து வருகின்றனர். இது படத்தின்  வெற்றிக்கு பின்விளைவை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனால் எங்களின்  அனுமதியில்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.