வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:51 IST)

‘வார்டு மெம்பர்கூட ஆகமாட்டார் நடிகர் விஜய்' - தனியரசு எம்.எல்.ஏ. தாக்கு

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு  காங்கேயம் தொகுதி எம்.எல். தனியரசு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, ‘தியாகிகள் வாங்கித்தந்த சுதந்திரத்துல, சிலநடிகர்கள் கூட நாடாளானும்னு முயற்சியில ஈடுபடுறாங்க. எந்த தியாகமும் செய்யாமல், ஒரு நாள் கூட குடிசையில் வாழாமல், ஏழை எளிய மக்களின் உழைப்பை பற்றி சிந்திக்காமல், யாரோ எழுதி தரும் வசனங்களை பேசிவிட்டு, கவிதைகளுக்கு வாயசைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராக நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.  ஏற்கெனவே முதலமைச்சராகும் கனவில் வந்த ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்கூட மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டு, தற்போது நிற்கதியாக அஞ்சி ஓடுகிற நிலையில் இருக்கிறார்கள். இதில் நடிகர் விஜய் அவர் வசிக்கும் பகுதிக்குக்கூட வார்டு மெம்பராக வந்துவிட முடியாது. இனியும் கோடம்பாக்கத்திலிருந்தோ, சாலிகிராமத்திலிருந்தோ முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு ஒருவர் கூட அரசியலுக்கு வரமுடியாது என்பதுதான் உண்மை. அப்படி வந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.