புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By VM
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:51 IST)

270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு பிரபல ஹாலிவுட் நடிகை மாயம்

270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு  செய்த சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையான ஃபேன் பிங்பிங் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மாயமாகிவிட்டார்.

ஹாலிவுட்டின் எக்ஸ் மேன் டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட் என்ற படத்தில் நடித்தவர் ஃபேன் பிங்பிங்.  இவர் மற்றும் இவர் தொடர்புடைய நிறுவனங்கள் 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஜியாங்ஸூ மாகாண வருமான வரி பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். எனவே அவர் 670 கோடி ரூபாய் அபராதத் தொகையை சேர்த்து 942 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.   ஆனால்  ஃபேன் பிங்பிங் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை எங்குள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.