வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (22:38 IST)

தனிப்படை தேடிவரும் நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா

நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் ஒருபக்கம் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.

ஆனால் இன்னொரு பக்கம் எச்.ராஜா, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த விநாயகர் சதூர்த்தி பொதுவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் பேசிய ஒருவர், 'எங்கள் தலைவன் தலைமறைவாகவில்லை. எங்கள் சிங்கம் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. முடிந்தால் கைது செய்து பார். ஆயிரக்கணக்கான தொண்டர்களை தாண்டித்தான் அவரை கைது செய்ய முடியும் என்று ஆவேசமாக பேசுகிறார்.

பொதுமேடையில் மக்கள் முன் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசும் ஒருவரை தனிப்படை வைத்து தேடி வரும் ஒரே காவல்துறை தமிழக காவல்துறைதான் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் 4 வாரங்களில் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தான் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.