1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A man who threw slipper on periyar statue was arrested

சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது

பெரியார்
பெரியாரின் பிறந்த நாளான இன்று சென்னையில் மர்ம நபர் ஒருவர் பெரியாரின் சிலை மீது காலணியை வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாபெரும் தலைவர் பெரியாரின் 140 நாளாவது பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவன் தன் காலில் இருந்த காலணியை எடுத்து பெரியார் சிலை மீது வீசினார்.
 
இதனால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். அந்த நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்த மர்ம நபரை கைது செய்தனர்.
பெரியாரை அவமதித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அண்ணா சாலை பகுதியே சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
அடுத்த கட்டுரையில்
எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு