வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (13:42 IST)

வீர வசனம் பேசிவிட்டு ஓடி ஒளிந்த ஹெச்.ராஜா? - இன்று கைது செய்யப்படுவாரா?

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கழட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், கிறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை பேசினார். 
 
இதனையடுத்து ஹெச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது, சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினரிடையே மோதலை தூண்டியது என மொத்தம் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
 
எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்கிற நிலையில், மன்னார்குடியில் இருந்த ஹெச்.ராஜா கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.