குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழர்கள் தந்தை!
வெண் தாடி வேந்தன்!
சிந்தனை மரம் ஒன்றை உருவாக்கி நிழல் தந்தவன்!
மண்ணில் தோன்றிய மகத்துவம்!
கசப்பாக இருந்தாலும், பிறர் அதிருப்தி அடைந்தாலும், உண்மையை மட்டும் பேசியவன்
மரணம் இவரை தீட்டியது இல்லை.
சற்றுக் களைப்பிற்கு பின்பு
பெரு நிறைக் கிழவன் தன் பிறந்த நாளில் கண் விழித்தான்.
தனது தடியை எடுத்துக்கொண்டு எச் ராஜாவின் வீட்டுக்கு சென்றார்.
வெங்காயம்! வெங்காயம்!
வெட்டியானிடம் அடி வாங்கிய பின்பு அடங்காமல் எழும் எலும்புக்கூட்டு எச்.ராஜா நீதானா! (தடியால் ஒரு அடி தலையில்). பேரன்மார் சொன்னார்கள். நீ தான் அந்த வெங்காயமா?
எச்.ராஜா : சமூகம் யாருனு தெரியல
எங்கு வந்து யாருக்கு பாடம் சொல்லுற? பகுத்தறிவை ஆயுதம் ஆக்கி, பயம் அறிய ஒரு சமூகத்துக்கா பாடம் சொல்லுற? நான்தான் ஈரோட்டு ராமசாமி! என் சிலைகளைத் தகர்ப்பேன் என்றயாமே? வேங்கை மகன் ஒத்தைல வந்துருக்கேன். வா பாக்கலாம். யார் நீ! பேசிக்கொண்டே கையை ஓங்குகிறார்
எச்.ராஜா : சமூகம் மன்னிக்கணும் அது என் அட்மின் தப்பு. இது யாரோ ஜோசப் விஜய்கள் தேச விரோதிகள் வீடியோவை எடிட் செய்து இருக்கிறார்கள்.
பெரியார் : .வெங்காயம்! இது என்ன வடக்கா. வீரம் விளைத்த மண். இந்த தட்ப வெட்பத்தில் உன் பருப்பு வேகாது. ஓடிட்டு
வைதவர் யாவரும் வாழட்டும் என்று நினைக்க நான் கவி பேரரசும் அல்ல! காவல் துறையும் அல்ல!
எச் ராஜா : ஐயா அந்த விநாயகர் விழாவில்
பெரியார் : எனக்கு அரச மரத்தடிப் பிள்ளையாரையும் தெரியும்! உங்க அப்பன் குதிரில் இருக்கும் மதவாதப் பிள்ளையாரையும் தெரியும். மீண்டும் ஒரு தடி அடி. ஏழே! நீ பேசுற பேச்சுக்கெல்லாம் இந்த அரசும், காவல் துறையும், நீதி மன்றங்களும் கும்பக்கர்ணனைப் போல தூக்கலாம். நான் தூக்க மாட்டேன். என் பேரன்மார் தூக்க மாட்டார்கள்.
எச்.ராஜா : அது வந்து தமிழ் தீவிரவாதிகள் அதிகமா ஆயிட்டாங்க! பாதிரியார்கள் எல்லாம் லஞ்சம் கொடுக்குறாங்க! போலீஸ் கரப்டட்டு.
பெரியார் : மண்ணாங்கட்டி! நீ சொன்னதையே உன்னால் நான் தான் சொன்னேன் சொல்ல முடியல! சோபியவுக்கும், நந்தினிக்கும், வளர்மதிக்கும் ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயமா? சுய மரியாதை என்பது நாணயம் மட்டும் அல்ல. அது தமிழர்களின் கவுரவம்..ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சாமானியனுக்கு தான் சட்டம். உன் மீது எட்டு வழக்குகள் எல்லாம் தேவை இல்லை. உன்னைப் போன்ற வீஷக்கிருமிகளுக்கு என் தடியே போதும் என்று வெளுக்க ஆரம்பிக்கிறார் பெரியார்.
எச்.ராஜா : இவர் ஈரோட்டு ராமசாமியே அல்ல. இவர் முகமத் ராமசாமி.
அரேபிகளின் கைக்கூலி என்று கூறிக்கொண்டே ஓட்டம் பிடிக்கிறார்
இரா காஜா பந்தா நவாஸ்