1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. CBSE 12th standard exam result announced

வெளியானது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சி.பி.எஸ்.இ.
சுமார் 11 லட்சம் பேர் எழுதிய சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 
கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வை 11.86 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நடைபெற்றபோது பொருளாதார பாடத்தின் கேள்விகள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனதால் மறுதேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Cbse.nic.in மற்றும் cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்
வேல்முருகன் கைது எதிரொலி: மேலும் ஒரு சுங்கச்சாவடி சூறை