உலகில் 18 மணி நேரம் வேலை செய்யும் ஒரே பிரதமர் மோடி! சொன்னவர் யார் தெரியுமா?

Last Modified சனி, 26 மே 2018 (13:24 IST)
பணமதிபிழப்பு, ஜிஎஸ்டி, உள்பட பிரதமர் மோடியின் பல திட்டங்களுக்கு நாடு முழுவதும்
எதிர்ப்பு தோன்றியுள்ள நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி தான் பிரதமர் என்ற கருத்துக்கணிப்பின் முடிவு எப்படி வந்தது என்பதே பலருக்கு ஆச்சரியமாக உள்ளது.

மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் 'உலகிலேயே நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்யும் ஒரே பிரதமர் நமது பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
modi
பாஜகவின் ஆட்சி முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'இந்திய பிரதமர்களில் அதிக உழைப்பை வெளிப்படுத்தியவர் நரேந்திர மோடி. மட்டுமே என்றும், அவர் தினமும் நாட்டு மக்களுக்காக 15 முதல் 18 மணி நேரம் வேலை செய்கிறார் என்றும் கூறினார். மேலும் நாட்டுக்காக மிக கடுமையாக பாடுபடும் பிரதமரை தந்ததில் பாஜக பெருமை கொள்வதாகவும், கடந்த 4 ஆண்டு கால மத்திய பாஜக அரசு ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்கி வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.இதில் மேலும் படிக்கவும் :