திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (12:36 IST)

1000 முறைக்கு மேல் கதறி அழுதேன்; சன்னிலியோன் ட்வீட்

ஆபாச நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், சமீபத்தில் ஒரு படத்தை பார்த்து 1000 முறை கதறி அழுதிருக்கிறார்.
ஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஏராளமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். இவருக்கு  ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை.
 
தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார். செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். ஆனால் சமீபத்தில் பெங்களூருவில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள். தற்போது தமிழில் அவர் நடிக்கும் சரித்திர படம் வீரமாதேவி அதற்கு உதவும் என்று நம்பி இருக்கிறார்.
இந்நிலையில் சன்னிலியோன் வாழ்க்கையை பற்றி அவரது ஒப்புதலோடு ஆவணப்படமாக தயாராகி உள்ளது. அதில் அவரது சிறுவயது சம்பவங்கள், செக்ஸ்  நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களையும் அதில் பதிவு செய்துள்ளனர். இந்த படம் சன்னிலியோனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சன்னிலியோன் கதறி அழுதுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது. 1000  முறைக்கு மேல் கதறி அழுதேன். நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று படத்தை பற்றிய தனது உணர்வுகளை  பதிவு  செய்துள்ளார்.