1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi to Visit Philippines on November 16-17 to Attend ASEAN-India and East Asia Summits

2 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி.. முக்கிய பேச்சுவார்த்தை..

modi
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மனிலாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். 
 
பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் ஆர். மார்க்கோஸ் ஜூனியரின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பயணத்தின்போது, 23-ஆவது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21-ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த ஆண்டு ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாகக் கடைபிடிக்கப்படுவதால், இப்பயணம் இரு தரப்பு உறவில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
 
மனிலாவில் நடைபெறும் மாநாடுகளில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பிரதமர் மோடி தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார். 
 
குறிப்பாக, ஆசியான்-இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. பிலிப்பீன்ஸ் நாட்டின் தற்போதைய ஆசியான் தலைமைப் பொறுப்பின் கீழ் நடைபெறும் இந்த மாநாடுகள், இந்தியாவின் 'கிழக்கே பார்' கொள்கையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளி பண்டிகைக்கு ரூ.72000 கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள்..வரலாறு காணாத விற்பனை...