தொடர்புடைய செய்திகள்
- நீங்க சித்ரா மாதிரியே இருக்கீங்க.. முல்லை கேரக்டர்ல நடிங்க!?- வைரலாகும் போட்டோஷூட்!
- 2020 மோசமான வருஷம்தான் போல! சுஷாந்த் சிங் முதல் சித்ரா வரை! – உயிரிழந்த பிரபலங்கள்!
- சின்னத்திரை சித்ராவின் கடைசி படப்பிடிப்பு இதுதான்: வைரல் வீடியோ
- நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் .... கணவர் ஹேமந்த்ரவி கைது! போலீஸார் அதிரடி
- சித்ராவுக்கும் எனக்கும் சண்டையா? தாய் விஜயா பேட்டி!
பாண்டியன் ஸ்டோர்ஸால் சித்ராவுக்கு அதிக தொல்லை: தாயார் பேட்டி!
சித்ராவின் உடற்கூறாய்வு அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை என சித்ராவின் தாய் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி.
தமிழ் சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த சில நாட்கள் முன்னதாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் திருவான்மியூரில் உள்ள வீட்டில் சித்ராவின் தாய் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் சித்ரா ஏன் தனியாக தங்கினார் என்பது தெரியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பது குறித்து ஹேம்நாத் அதிகளவில் சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
சித்ராவைப் பற்றி அவதுாறான கருத்துக்களளை பரப்பினார். என் மகள் அப்படிப்பட்டவர் இல்லை. சித்ராவின் உடற்கூறாய்வு அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை. அவரது உடற்கூறாய்வும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படவில்லை.
சித்ரா மரணம் தொடர்பான விசாரணையின் போக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கவே செய்கிறது என தெரிவித்துள்ளார்.
