1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (16:38 IST)

சித்ராவுக்கும் எனக்கும் சண்டையா? தாய் விஜயா பேட்டி!

எனக்கும் எனது மகளுகும் இடையே எந்தவித சண்டையும் நடக்கவில்லை என சித்ராவின் தாயார் விஜயா பேட்டி. 
 
சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  
 
சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக நசரத் பேட்டை போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோரிடம் விசாரித்ததில் ஹேமந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு சித்ராவிடம் சண்டையிட்டதும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சண்டையிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்ராவின் தாயார் விஜயாவும் சித்ராவுக்கு பிரச்சனை கொடுத்ததாகவும் தெரிகிறது. 
 
ஆனால், சித்ராவின் தாயார் விஜயா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கும் எனது மகளுகும் இடையே எந்தவித சண்டையும் நடக்கவில்லை. மரணத்திற்கு முன்பும் சித்ரா என்னிடம் தான் போனில் பேசினார் என தெரிவித்துள்ளார்.