திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (17:38 IST)

சின்னத்திரை சித்ராவின் கடைசி படப்பிடிப்பு இதுதான்: வைரல் வீடியோ

சின்னத்திரை சித்ராவின் கடைசி படப்பிடிப்பு இதுதான்: வைரல் வீடியோ
சின்னத்திரை நடிகை சித்ரா டிசம்பர் 9ஆம் தேதி தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலை சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் தங்கும் விடுதி சென்றதாகவும் அங்கு அவருக்கும் அவருடைய கணவருக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் அதன் பின்னர் அவர் தனது தாயாருடன் போனில் பேசி விட்டு தூக்கில் தொங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்து உள்ளது
 
இந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி அவர் தற்கொலை செய்த அன்று ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாட்டு பாடி நடனமாடி ஜாலியாக பேசி சிரித்த காட்சிகளின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
 
ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியின் புரமோவாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது