1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP Accuses Congress Of Using Fake AI Images To Exaggerate Crowd Size At Delhi Rally

ராம்லீலா மைதானத்தில் கூடிய கூட்டம் ஏஐ புகைப்படமா? பாஜக குற்றச்சாட்டு..

காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரியும், எஸ்.ஐ.ஆர் பணியை ரத்து செய்ய வலியுறுத்தியும் 'இண்டி' கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதாகவும், பேரணி மாபெரும் வெற்றி பெற்றதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இருப்பினும், இக்கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்ததாகவும், எதிர்க்கட்சிகளின் இந்தப் போராட்டம் முற்றிலும் பிசுபிசுத்துப் போய்விட்டதாகவும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
 
இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் கட்சி மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியுள்ளார். இண்டி கூட்டணியினர் தங்களின் போராட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கூடியது போல் காட்டுவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
ராம்லீலா மைதானம் நிரம்பி வழிவது போல அவர்கள் தயாரித்த ஏஐ புகைப்படம் கூட சரியாக வரவில்லை என கூறி, பொய்களை பரப்பி மக்களை ஏமாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கடல் நடுவே எல்.இ.டி விளம்பர பலகைகள்.. கோடிக்கணக்கில் வருமானம்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு..