தொடர்புடைய செய்திகள்
- கட்சியில் இருந்து கொண்டே வேறு கட்சிக்கு உள் வேலை – அதிமுக உறுப்பினர்கள் நீக்கம்
- வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை!
- சசிகலாவை நோக்கி அதிமுக வரும்… சி ஆர் சரஸ்வதி ஆருடம்!
- அதிமுக கூட்டணி வேட்பாளர் ஹெச். ராஜா... அப்போ பாஜக இல்லையா?
- டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!
கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் ஓட்டு இல்லை… மக்கள் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிமுக அமைச்சர் கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் வாக்கு இல்லை என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனராம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அயன்வலசு கிராமத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் சுற்றியுள்ள 52 கிராமங்களில் இருந்து எதிர்ப்பு உருவானது. இதனால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று மக்கள் கூறினர்.
இந்நிலையில் இப்போது அந்த கிராம மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் வாக்கு இல்லை என தொகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்துவதாக சொல்லப்படுகிறது.
