1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja uses ADMK name without mentioning BJP

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஹெச். ராஜா... அப்போ பாஜக இல்லையா?

பாஜக
பாஜக வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் அதிமுகவின் அடையாளங்களையே பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் பாஜக வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் அதிமுகவின் அடையாளங்களையே பயன்படுத்துவதாகவும், பாஜக மேலிட முக்கிய தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களை தவிர்ப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் அம்மாவின் சின்னம், எம்ஜிஆரின் சின்னம் என தாமரை வரையப்பட்டுள்ளது. நாளை தாராபுரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி வர உள்ள நிலையில் அவர் பெயர் இடம்பெறாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
 
இதேபோல, பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஹெச். ராஜா என தாமரை சின்னத்துடன் வரையப்பட்டு, வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு என எழுதப்பட்டுள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கமல் பாஜகவின் பி டீம்: டி.ராஜா பேட்டி!