வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (12:42 IST)

கட்சியில் இருந்து கொண்டே வேறு கட்சிக்கு உள் வேலை – அதிமுக உறுப்பினர்கள் நீக்கம்

அதிமுகவில் இருந்து கொண்டே கட்சி சாராமல் வேறு கட்சிக்கு வேலை பார்த்ததாக அதிமுக உறுப்பினர்கள் சிலரை அதிமுக அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அதிமுகவினர் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த சிலர் கட்சிக்குள் இருந்தபடியே அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அதிமுக கட்சியின் கொள்கைகளுக்கும், வேட்பாளர்களுக்கும் எதிராக செயல்பட்டதாக திருப்பூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளது.