பொருப்பாளர்ங்கர பொருப்பு இல்லாம... எஸ் பி வேலுமணி பெண்களுடன் ட்டம்!!
ஆதரவாளர்களோடு சேர்ந்து மலைவாழ் மக்களின் இசைக்கு, நடனமாடி வாக்குக்ளை சேகரித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேயே சிவசேனாபதி போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி உருவாகி இருப்பதால், அமைச்சர் வேலுமணி 21 தொகுதிகளுக்கு பொருப்பாளராக இருந்தாலும், தனது தொகுதியிலேயே வாக்குகளை சேகரித்து வருகிறார்.
50 ஆண்டுகளில் செய்யாததை 5 ஆண்டுகளில் செய்ததாக விளம்பர படுத்திய போதும் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றார். இந்நிலையில் அட்டுக்கல் மலைவாழ் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் எஸ் பி வேலுமணி அங்கிருந்த, பழங்குடியின பெண்களுடன் , அவர்களது இசைக்கு ஏற்ப தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நடனமாடி வாக்குகளை சேகரித்தார்.