செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:56 IST)

அம்மா அரசை காக்கும் பாகுபலியே! கிராபிக்ஸில் எஸ்.பி.வேலுமணி! – ட்ரெண்டிங்கில் அதிமுக போஸ்டர்!

அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செல்லும் விழாவிற்காக வழியில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் பிரபலங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வால்பாறையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதற்காக வரவேற்று பேனர் வைத்த அதிமுகவினர் பாகுபலி படத்தில் அமைச்சரின் முகத்தை மார்பிங் செய்து “அம்மா அவர்களின் அரசை காத்து நிற்கும் பாகுபலியே” என வாசகங்களை அச்சடித்துள்ளனர். இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.