திமுக ஒரு கொத்தடிமை கட்சி - ஜெயகுமார் விமர்சனம்!
பெண்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை ராயபுரம் தொகுதியில் களைகட்டிய அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம்.
சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மன்னப்பன் தெருவில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பிரச்சாரத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஜெயக்குமார்க்கு பட்டாசுகள் வெடித்தும் மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தவாறும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அத்தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய ஜெயக்குமார்க்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக பாஜக மற்றும் தமாகா தொண்டர்கள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் சீனிவாசன் தெருவில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் இரட்டை இலை மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவத்தில் வண்ண கோலமிட்டு அமைச்சர் ஜெயக்குமார்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சியே முத்தம் கொடுத்துவாறும் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒலிபெருக்கியில் இசைக்கபட்ட பாடலை கேட்டு உற்சாகமாக பாட்டு பாடி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார்.
தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லாத அளவுக்கு அதிமுக விற்கு மக்கள் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர் எனவும் எதிர் கட்சிகள் விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் அது மக்கள் மத்தியில் ஈடுபட போவதில்லை. தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று சட்ட சபைக்கு கண்டிப்பாக வருவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் திமுக ஒரு கொத்தடிமை கட்சி . காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் காலில் விழுந்து வளம் கொழிக்கும் துறைகளில் குடும்பக் உறுப்பினர்களுக்கு பதவி வாங்கி வாழ்ந்ததாகவும் அதிமுக அரசை பொறுத்துவரை மத்தியில் பாஜக உடன் நல்லுறவை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க தான் நாங்கள் மத்திய அரசு உறவை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் திமுகவின் கலாச்சாரமே பெண்களை பலித்து பேசுவதும் ஆதி திராவிட மக்களை பலித்து பேசுவதே. ஆ ராசா மன்னிப்பு கேட்டாலும் கடவுள் அவரை மன்னிக்க மாட்டார். எனவும் தேர்தலில் தமிழக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள் எனவும் பேசினார். ராகுல் காந்தி நேற்று பேசியது புளித்து போன கதை அதை தான்.
அதிமுகவிற்கு எந்த முகமுடியும் இல்ல எங்களுக்கு உள்ள இரண்டு முகங்கள் மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம் ஜி ஆர் மட்டுமே. திமுகவின் தோல்வி பயத்தின் காரணமாகவே சேலம் பிரச்சரத்தில் அனைத்து கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.