1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (11:01 IST)

அரசியலுக்கு வராத நபருடன், அரசியலில் உள்ள என்னை ஒப்பிடுவது தவறு - டி..ஆர் பேட்டி!

ஆன்மிக அரசியலில் ஈடுபடுவேன் என கூறி அரசியலுக்கு வராத நபருடன், அரசியலில் உள்ள என்னை ஒப்பிடுவது தவறு என டி.ராஜேந்திரன் பேட்டி. 

 
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் பிரபல இயக்குனர் டி.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் என்னுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிமுக அழைத்தனர் ஆனால் நான் கேட்கும் அளவிற்கு அவர்களால் சீட் வழங்க முடியாது என்பதால் இந்த தேர்தலில் இலட்சிய திமுக போட்டியிடவில்லை என தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர் தற்போது திரையரங்குகளில் கூட்டம் வராமல் இருப்பதாலும் ,உள்ளாட்சி வரி 8% இருக்கின்ற காரணத்தால் சிறிய திரைப்படங்கள் வெளியிட முடியாமல் உள்ளது எனவே அந்த படங்களை வெளியிட புதிதாக நானே ஒரு OTT தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் அந்த புதிய OTT தளத்தை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் தற்போது நான் ஆன்மிகத்தை மிகவும் விரும்புவதாகவும் எனவே அடுத்து நான் ஆன்மிக அரசியலில் மட்டுமே ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார் . மேலும் ஆன்மிக அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறி அரசியலுக்கு வராமல் சென்ற அவருடன் என்னை ஒப்பிடுவது தவறு என்றும் நான் 1982 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு இருப்பதாக கூறிய அவர் மக்களுக்காக பல்வேறு போராட்ட களத்தில் இருக்கும் என்னை கலதிற்கே வராத நபருடன் ஒப்பிடுவது தவறு என கூறினார்.
 
மேலும் இந்த தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு நபர்களின் கூடாரம் காலியாக மாறும் என்றும் கருத்து கணிப்பு என்ற பெயரில் அவர் அவர் கருத்துகளை மக்கள் மத்தியில் தங்களின் கருத்துகளை திணித்து வருவதாக தெரிவித்தார்.