கேரள நபர் தற்கொலை!.. வியூஸுக்காக ஆசைப்பட்டு வீடியோ எடுத்தாரா அந்த பெண்?!..
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் தீபக். இவரின் வயது 42. இவர் ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரின் குடும்பம் கோவிந்தபுரத்தில் வசித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தீபக் கேரளா அரசு பேருந்தில் கண்ணூருக்கு பயணம் செய்திருக்கிறார்.
அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்கிற பெண் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தீபக் வேண்டுமென்றே தன்னுடைய உடல் மீது மோதி மோதி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் அதில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோ வைரலானதால் தீபக் கடுமையான மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துவக்கத்தில் அந்த பெண்ணிற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் தற்போது அந்த பெண்ணின் மீது பலரும் கோபப்பட்டு வருகிறார்கள். தீபக் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போல தெரியவில்லை.. பேருந்தில் டிரைவர் பிரேக் பிடிக்கும்போது அருகில் நிற்பவர்கள் மீது மோதுவது சகஜம்தான். ஆனால் அதை தவறாக புரிந்து கொண்ட அந்த பெண் வேண்டுமென்று வியூஸுக்காக ஆசைப்பட்டு வீடியோ எடுத்து தற்போது தீபக் தற்கொலை செய்து கொள்வதற்கும் காரணமாக அமைந்துவிட்டார். அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சொல்லி வருகிறார்கள்.
ஒருபக்கம் இதே கருத்தை தீபக்கின் உறவினர்களும் காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர். தீபக் மறைவால் அவரின் அவரின் 2 குழந்தைகளும் தந்தையை இழந்துள்ளனர். அவரின் மனைவி கணவனை இழந்திருக்கிறார். சமீப காலமாகவே பேருந்தில் பாலியல் சீண்டல் என்கிற பெயரில் பெண்கள் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.