1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ooty special train service will be starting soon

கோடை சீசன் ஆரம்பம்; ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்!

Tamilnady
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் நிலையில் சுற்றுலா தளமான ஊட்டியில் மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது அதிகரிக்கும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊட்டி – மேட்டுபாளையம் மலை ரயிலில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டுவர்.

இந்நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஊட்டி மலைரயில் சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் இந்த ரயிலில் பயணிக்க முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம்; குழப்பத்தில் திமுகவினர்!