திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (11:35 IST)

சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம்; குழப்பத்தில் திமுகவினர்!

சிதம்பரம் அடுத்த குன்னூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக-விசிக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் விசிக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசிக தொகுதிகள் தவிர மற்ற சில தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே குன்னம் தொகுதியில் சுயேட்சைக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு திமுக போட்டியிடும் நிலையில் பலர் பானை சின்னத்தை விசிக சின்னமாக கருதி அதற்கு வாக்களிக்கும் ஆபத்து எழுந்துள்ளதாக பீதி எழுந்துள்ளது.