1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. kaalidas 2 movie trailer video is out

சார் எனக்கு பயமா இருக்கு!... அதிர வைக்கும் காளிதாஸ் 2 டிரெய்லர் வீடியோ!...

kaalidas2
காதல் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானவர் பரத். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக மாறினார். அதேநேரம், புதிய நடிகர்களின் வரால் பரத்துக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.

பரத்தின் நடிப்பில் உருவாகி 2019ம் வருடம் ரிலீஸான காளிதாஸ் திரைப்படம் பரத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.  ஸ்ரீ செந்தில் என்பவர் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகியிருந்தது. தற்போது காளிதாஸ் 2 படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த படமும் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீசெந்தில் இயக்கியுள்ள இந்த படத்தில் பவானிஸ்ரீ, அஜய் கார்த்தி, அபர்நதி, கிஷோர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 10ம் தேதி காளிதாஸ் 2 வெளியாகவுள்ளது.



About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இயக்குனர் அட்லி குடும்ப நிகழ்வில் விஜய்!.. வைரலாகும் வீடியோ!...