1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. Legend saravanan leader movie teaser

அடிப்பொலி1 ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ டீசர்

Legend சரவணன்
Legent சரவணனின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கும் புதிய படத்தின் டீசர் ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை காக்கி சட்டை, கொடி ,எதிர்நீச்சல், கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு லீடர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் பாசத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் தான் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் பொழுது படம் முழுக்க ஒரு ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆக்சன் காட்சிகளில் லெஜெண்ட் சரவணன் ஒரு மாஸ் ஹீரோவாக தன்னை பிரதிபலித்து இருக்கிறார். இந்த டீசர் வெளியான சில மணி நிமிடங்களில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
 
டீசரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அடி தூள், கருப்பு திரைப்படத்தோடு இந்த படத்தை மோத விடுங்கள். கண்டிப்பாக இந்த படம் வெற்றி ஆகும், லெஜெண்ட் அண்ணாச்சி வேற லெவலில் இருக்கிறார் என்றெல்லாம் ஒரு பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர். அவர் நடித்த முதல் படமான லெஜன்ட் திரைப்படத்தில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
 
அவருடைய நடிப்பு கொஞ்சம் மெருகேற வேண்டும், ஆக்ஷனில் கவனம் செலுத்தவில்லை என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதை எல்லாம் இந்த படத்தில் அவர் நிவர்த்தி செய்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.
 
ஒரு பக்கம் கூலி படத்தின் சாயல் இந்த டீசரில் இருப்பதாக தெரிகிறது. ஆக மொத்தம் ஆக்‌ஷனில் வெளுத்து வாங்கியிருக்கிறார் நம்ம லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி.

 
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
புதிய தொடரில் இணையும் பாண்டியன் ஸ்டார் ஜோடி.. ஆச்சரிய தகவல்..!