1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Squid games season 3 trailer got released

உலக சினிமா: ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் மூன்றாம் பாகத்தின் டிரைலர் ரிலீஸ்!

ஸ்கிவிட் கேம்ஸ்
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்ட சீரிஸாக அமைந்தது.

இதையடுத்து இந்த சீசனின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸானது. முதல் சீசன் அளவுக்கு இரண்டாவது சீசன் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கவனம் பெற்றது. இந்நிலையில் இதன் மூன்றாவது மற்றும் இறுதிபாகம் வரும் 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து அதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பரபரப்பான த்ரில்லராக செல்லும் இந்த டிரைலர் சீசனைப் பார்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

அடுத்த கட்டுரையில்
ரிலீஸுக்கு முன்பே ரன்னிங் டைம்-ஐக் குறைக்கிறதா ‘குபேரா’ படக்குழு!