வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:59 IST)

தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்யும் விராட் கோலியின் மனைவி!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலிக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் தலைமையேற்று விளையாடி வருகிறார். இரு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளதால அவர் மீது விமர்சனங்கள் உருவாகியுள்ளது.

இந்நிலையில்,  கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

எனவே அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் பிரவசவத்துக்காக அவர் தயாராகி வருகிறார்.

இந்நிலையில்,  கோலி தனது மனைவி அனஷ்காவுக்கு உடற்பயிற்சி சொல்லிக்கொடுப்பது போன்ற புகைப்படம்  இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இப்புகைப்படத்தில் கர்ப்பமாக உள்ள அனுஷ்கா தலைகீழாக நிற்பது போன்றிருப்பதால் பலரும் அவரது மன உறுதியைப் பாராட்டி வருகின்றனர்