1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Rathnakumar will direct Lawrence soon

குலு குலு இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்!

சந்தானம்
ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் புகழ் வெளிச்சம் பெற்றவர் இயக்குனர் ரத்னகுமார். இதையடுத்து அவர் பெயரில் பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடை மற்றும் குலுகுலு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றின.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை இலாகாவில் முக்கிய நபராக இருந்து வரும் ரத்னகுமார் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களை லாரன்ஸ் முடித்ததும் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ரஜினியின் ''ஜெயிலர் ''பட அறிவிப்பு மியூசிக்...அனிருத் டுவீட்