1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:14 IST)

கன்னட சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் சந்தானம்… தலைப்பு இதுதானா?

சந்தானம் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் ரிலீஸாகும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து உருவாகும் தமிழ் மற்றும் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். சந்தானம் 15 என்ற தற்காலிக தலைப்போடு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி சத்தமே இல்லாமல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு KICK என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.