1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. producer isari ganesh priced vishnu vishal bmw car

கட்டா குஸ்தி2 ஹிட்!. விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!.. வீடியோ!..

gatta kushti2
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழு படம் தொடங்கி கட்டா குஸ்தி 2 வரை பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர்கள் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.

அதேபோல் FIR , ஆர்யன் ஆகிய படங்களிலும் விஷ்ணு விஷால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பின் இவருக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. எனவே ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருந்தார்.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை..

இந்நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. விரைவில் இந்த படம் 50 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது. இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விஷ்ணு விஷாலுக்கு ஒரு பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.



About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
உடம்பு சிக்குன்னு இருக்கணுமா!.. அதர்வா சொல்லும் அட்வைஸ் கேளுங்க!..