தனுஷ் சொன்ன V அவர்தானாம்!.. மீண்டும் அதே டைரக்டருடன் இணையும் D!...
நடிகர் தனுஷ் நடிப்புபு, இயக்கம் என மாறி மாறி பயணித்து வருகிறார். ஒரு படம் முடிந்த இடைவெலியே தெரியாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான கர திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை..
தற்போது அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு, சமீபத்தில் கடந்த 8ம் தேதி DV என்கிற போஸ்டர் டிசைனை பகிர்ந்து பணிந்தவரை விட்டு வைப்பான்.. பகைத்தவரை நட்டு வைப்பான் என பதிவிட்டிருந்தார். மேலும் வருகிற 10ம் தேதி இது தொடர்பான அப்டேட் வருகிறது என தனுஷ் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இது தனுஷின் புதிய பட அறிவிப்புதான் என்றாலும் D என்பது தனுஷை குறிக்கிறது.. ஆனால் V என்பது யார் என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அது வெற்றிமாறன் என சிலரும், ஹெச்.வினோத் என சிலரும் சொன்னார்கள். ஆனால் அவர்கள் இருவருமே இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
ஏற்கனவே தனுஷை வைத்து வாத்தி படத்தை இயக்கியவரும், லக்கி பாஸ்கர் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ள வெங்கி அட்லூரி இயக்கத்தில்தான் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகவிருக்கிறது..