1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. aa23 movie test shoot over and making videos oon

டெஸ்ட் ஷூட் ஓவர்!.. விரைவில் மேக்கிங் வீடியோ!.. லோகேஷ் - அல்லு அர்ஜூன் பட அப்டேட்...

aa23
கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ்.  விஜயை வைத்து இவர் இயக்கிய லியோ மற்றும் ரஜினியை வைத்து இயக்கிய கூலி ஆகிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது..

அதிலும், கூலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ரஜினி - கமல் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கனகராஜின் கையை விட்டுப் போனது. தற்போது லோகேஷ் கனகராஜ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 31ம் தேதி வெளியாகவிருக்கிறது.  ஒருபக்கம் புஷ்பா பட புகழ் நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கவுள்ள  படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்..

ஏனெனில், அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அல்லு அர்ஜுனும் லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான டெஸ்ட் ஷூட் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் அது தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
Toxic: டாக்சிக் படத்தின் நடிகர், நடிகைகளின் சம்பள விபரம்!.. ஆத்தாடி இவ்ளோ கோடியா?!..