வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (18:56 IST)

பிரபாஸா இப்படி செய்தது? அவரிடம் இல்லாதா காரா? பைக்கா?

பாகுபலி நாயகன் பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்திய கார் மற்றும் பைக்கை தனது வீட்டிற்கு எடுத்த சென்ற சம்பவம் தற்போது டோலிவுட்டில் ஹாட் டாக்காக உள்ளது. 
 
ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது தேவையான உடை மற்றும் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பது சினிமாவில் உள்ள வழக்கம். 
 
அபப்டி வாங்கி பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் பின்னர் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்றுவிடும். ஆனால், பிரபாஸ் படப்பிடிப்பில் பயன்படுத்திய கார் மற்றும் பைக்கை அவரது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். 
 
அதாவது, சாஹோ படத்தில் இடம்பெறும் கார் ரேஸ், பைக் ரேஸ் சண்டைக் காட்சிக்காக வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய கார், பைக் வாங்கப்பட்டது. 
 
பிரபாஸிற்கு இத்தனை அம்சங்களுடைய கார் மற்றும் பைக்குகள் மிகவும் பிடித்துவிட்டது. எனவே, படப்பிடிப்பில் இவற்றை பயன்படுத்தியதன் ஞாபகமாக அதை தனது வீட்டுக்கு எடுத்து சென்று ஷெட்டில் வைத்திருக்கிறாராம்.