வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (19:32 IST)

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா! ராஜஸ்தான் பேட்டிங்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21வது போட்டி இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
 
இன்றைய ஆடும் 11 பேர் கொண்ட ராஜஸ்தான் அணியில், ரஹானே, பட்லர், ஸ்மித், திரிபாதி, ஸ்டோக்ஸ், சோப்ரா, கவுதம், ஆர்ச்சர், கோபால், மிதுன், குல்கர்னி ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் கொல்கத்தா அணியில் லின், நரேன், உத்தப்பா, ரானா, தினேஷ் கார்த்திக், கில், ரஸல், செளவ்லா, குல்தீப் யதவ், கர்னி மற்றும் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
 
ராஜஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியும் ஒன்றில் வெற்றியும் பெற்று இரண்டு புள்ளிகள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது