டக்குனு வந்த மிஸ்டர் லோக்கல் பட பாடல்! கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

Last Updated: சனி, 6 ஏப்ரல் 2019 (17:54 IST)
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்திலிருந்து "டக்குன்னு டக்குன்னு" என்ற லிரிகள் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

 
சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
 
மே 1ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. மிர்ச்சி விஜய் எழுதியுள்ள இந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ளார். இப்பாடல் வெளியான உடனேயே இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :