கி.வீரமணியின் கார் கண்ணாடி உடைப்பு: திருப்பூரில் பரபரப்பு

Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (08:24 IST)
சமீபத்தில் இந்துக்கள் வழிபடும் கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவர் பிரச்சாரத்திற்கு செல்லுமிடங்களில் எல்லாம் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூரில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கி.வீரமணி கார் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் உடைத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பூர் – தாராபுரம் சாலை, கரட்டாங்காடு பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க கி.வீரமணி காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் கி.வீரமணி பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்தவுடன் அவரை பாதுகாப்பு படையினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :