ஞாயிறு, 6 ஏப்ரல் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (19:36 IST)

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

Ajith cut out

குட் பேட் அக்லி ரிலீஸுக்காக அஜித்குமாருக்கு வைக்கப்பட்ட கட் அவுட் சரிந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் த்ரிஷா, ப்ரியா ப்ரகாஷ் வாரியர், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் அதன் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளாலும், அஜித்குமாரை இளமையாக காட்டிய ஏஐ காட்சிகளாலும் ரசிகர்களிடையே பெரும் வைரலாகியுள்ளது. அதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி வெளியாகவுள்ள தியேட்டர்களில் பேனர் கட்டுவது, கட் அவுட் வைப்பது என ரசிகர்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர்.

 

அவ்வாறாக திருநெல்வேலியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிரம்மாண்ட உயரத்திற்கு அஜித்குமாருக்கு கட் அவுட் வைக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட் அவுட் கம்பிகள் சரிந்து மொத்தமாக விழுந்தன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K