ஆரத்திக்கே காசு வரலை, அக்கவுண்டுக்கு எப்படி வரும்? கார்த்திக் சிதம்பரத்தை சுற்றி வளைத்த பெண்கள்

Karthik Chidambaram
Last Modified திங்கள், 8 ஏப்ரல் 2019 (07:23 IST)
ஆரத்தி எடுத்ததற்கே காசு கொடுக்காத நீங்கள் அக்கவுண்டில் எப்படி ஆறாயிரம் ரூபாய் போடுவீர்கள் என்று சிவகெங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை கிராமத்து பெண்கள் சுற்றி வளைத்ததால் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
சிவகெங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் நேற்று மானாமதுரை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுக்க 25 பெண்களை காங்கிரஸார் ஏற்பாடு செய்தனர். ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தலா ரூ.500 என்று முதலில் பேசி வைத்திருந்த காங்கிரஸார் பின்னர் திடீரென அனைத்து பெண்களுக்கும் சேர்த்து ரூ.800 மட்டுமே கொடுத்ததால் அந்த பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் வாக்கு சேகரிக்க வந்த கார்த்திக் சிதம்பரத்திடமே அந்த பெண்கள் இதனை கூறி பஞ்சாயத்து செய்ய, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமாளித்த கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்டால் உங்களுக்கு மாதம் ஆறாயிரம் கிடைக்கும் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றார்.
ஆரத்தி எடுத்ததற்கே கசு கொடுக்காத இவர்கள், அக்கவுண்டில் எப்படி பணம் போடுவார்கள் என்று அந்த பெண்கள் புலம்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :