61 வயது பெண்ணுடன் மேரேஜ்: பரபரப்பைக் கிளப்பிய 29 வயது இளைஞர்

Man
Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:40 IST)
நைஜிரியாவில் 29 வயது இளைஞர் 61 வயது பெண்ணை திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த ஓபி(29) என்ற இளைஞருக்கு ஃபேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 61 வயது. திருமணம் ஆகவில்லை.
 
ஏற்கனவே அமெரிக்கா போகவேண்டும் என்ற வெறியுடன் இருந்த ஓபி, அந்த பெண்ணை திருமணம்  செய்துகொண்டு அமெரிக்கா போக திட்டமிட்டார்.
 
இதையடுத்து ஓபி அந்த பெண்ணை குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டார். விரைவில் அவர் அமெரிக்காவிற்கு பறக்க உள்ளார். இந்த காதல் ஜோடிகளின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :