அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அப்டேட்டை கொடுத்து மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது சன் பிக்சர்ஸ்.
தமிழ் சினிமா இயக்குனரான அட்லீ தமிழில் ராஜா ராணி, பிகில், மெர்சல் என ஹிட் படங்களை கொடுத்துவிட்டு பாலிவுட் சென்று ஷாரூக்கானை வைத்து 1000 கோடி ஹிட் படமான ஜவானையும் கொடுத்தார். தற்போது நீண்ட காலம் கழித்து மீண்டும் தென்னிந்திய சினிமா திரும்பும் அட்லீயின் அடுத்த படத்தில் தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கிறார் என்பது முடிவாகிவிட்டது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு டபுள் ஆக்ஷன் ரோல் என்றும், இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என்றும் பல பேச்சுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றை ஷூட்டிங் செய்ய அல்லு அர்ஜூன் அமெரிக்காவுக்கு சென்றதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில்தான் தற்போது சன் பிக்சர்ஸ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் a magnum opus, where mass meets magic என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு மகத்தான படைப்பு, மாஸ் மேஜிக்குடன் சேரும்போது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியை பார்க்கும்போது இது கண்டிப்பாக ஒரு விண்வெளி சாகசம் அல்லது டைமென்ஷன் ட்ராவல் மாதிரியான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Edit by Prasanth.K