1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. fans are angry with ajithkumar for deva demise

தேவாவின் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காத அஜித்!.. நன்றி இல்லையா?..

deva ajith
இசையமைப்பாளர் தேவா கடந்த 17ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும்,  முன்னாள் நடிகர், இந்நாள் தமிழக முதலமைச்சரான ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு தேவாவுக்கு அரசு மரியாதை செய்யப்படும் எனவும் அறிவித்தார். அவர் அறிவித்தபடியே 72 குண்டுகள் முழங்க தேவாவின் சொந்த ஊரில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது..

நேரில் செல்ல முடியாத திரைப்பிரலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஆனால் நடிகர் அஜித் தேவாவுக்கு எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை. அஜித்தின் கெரியரில் முக்கிய படங்களாக அமைந்த ஆசை, வான்மதி, காதல் கோட்டை, உன்னை தேடி, வாலி, ஆனந்த பூங்காற்றே, முகவரி, ரெட் உள்ளிட்ட பல படங்களுக்கும் தேவாதான் இசையமைத்திருந்தார்.

அந்த படங்களின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம். அப்படி இருந்தும் கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் தேவாவின் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட அஜித் சொல்லவில்லை என திரையுலகினரும், ரசிகர்களும் அவரை திட்டி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தனது கார் ரேஸ் போட்டிக்கு ஆதரவு கேட்டு வீடியோ வெளியிட்ட அஜித்துக்கு தேவா மறைவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்க நேரமில்லையா? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அடுத்த சோகம்!.. தேவாவின் சகோதரர் சபேஷின் மகன் மரணம்!....