1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rajnikanth comment about music director deva

தேவா ஒரு சொக்கத்தங்கம்!.. அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய ரஜினி!..

rajini deva
ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் ஆகிய மூன்று படங்களுக்கும் அவர் இசையமைத்திருந்தார். அதில், பாட்ஷா அண்ணாமலை ஆகிய படங்களில் தேவா கொடுத்த பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரின் உடல் தற்போது சென்னையில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தேவாவுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘தேவா எனக்காக இசையமைத்த பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் ஆகிய மூன்று படங்களுமே வெற்றிதான். படைப்பா எடுக்கும்போது ஏ.ஆர் ரகுமான் இசை என முடிவெடுத்தோம்.. ‘ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.. நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்று தேவாவிடம் கூறினேன்..

அதற்கு எழுந்து நின்று என் கையை பிடித்துக் கொண்டு ‘புதுசா வந்துட்டு இருக்காங்க.. சந்தோஷமா நல்லபடியா பண்ணுங்க.. உங்களின் 3 படங்களுக்கு இசையமைத்ததே என் பாக்கியம்’ என்றும் கூறினார். அந்த அளவுக்கு கள்ளம், கபடம், பொய், வஞ்சகம் இல்லாத சொக்கத்தங்கம் தேவா’ என ரஜினி பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்!.. விஜய்க்கு பத்திரிக்கை வைத்த கலாநிதிமாறன்...