1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (13:52 IST)

’ஜெய் ஹோ’ பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கல..! – ராம் கோபால் வர்மா பேட்டியால் சர்ச்சை!

AR Rahman
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக ஆஸ்கர் வென்றிருந்த நிலையில் அந்த பாடலின் இசை ஏ.ஆர்,ரஹ்மானுடையது அல்ல என இயக்குனர் ராம் கோபால் வர்மா பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் தொடங்கி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என இந்தியாவையும் தாண்டி ஹாலிவுட் வரை பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2008ல் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் அதற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, ரஹ்மான் ஆஸ்கர் வென்ற பாடலான ‘ஜெய் ஹோ’ பாடல் அவர் இசையமைத்தது கிடையாது என கூறியுள்ளார். பிரபல இந்தி பாடகர் சுக்விந்தர் சிங் அந்த பாடலை அப்போது சல்மான்கான் நடித்து வெளியான ‘யுவராஜ்’ படத்திற்காக கம்போஸ் செய்து வைத்திருந்ததாகவும் அதை ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனரில் பயன்படுத்திக் கொண்டதாகவும் பேசியிருந்தார்.


இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பாடகர் சுக்விந்தர் சிங்கே இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ராம் கோபால் வர்மா சொல்வதில் உண்மையில்லை என்றும், ஜெய் ஹோ பாடல் முழுவதும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததுதான் என்றும், ராம் கோபால் வர்மா எதையோ தவறாக புரிந்து கொண்டு இவ்வாறு பேசி வருவதாகவும் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஆதாரமில்லாத அவதூறை பரப்பிய ராம் கோபால் வர்மாவை ரஹ்மான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K