திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (21:55 IST)

ராமாயணம் படம்; ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் ஆஸ்கர் விருது இசையமைப்பாளர்?

a.r.rahman - Hans Zimmer
ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்பர் ராமாயணம் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகிறது.
 
பிரபல இயக்குனர் நிதிஸ் திவாரி இயக்கத்தில்  ராமாயணம் கதையை மையமாக வைத்து, பிரமாண்டமாக திரைப்படம் உருவாகவுள்ளது.
 
இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
இப்படத்தில் அனுமராக சன்னி தியோலும், குப்ப கர்ணனா பாபி  தியோலும் நடிக்கவுள்ளனர்.
 
3 பாகங்களாக உருவாகவுள்ள  இப்படம் ரூ.1000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய  உருவாகவுள்ளது.
 
இந்த நிலையில், இப்படத்தில்  ஜெர்மனியைச் சேர்ந்த இசையமைப்பாளர்   ஹன்ஸ் ஜிம்மர் ராமாயணம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஹன்ஸ் ஜிம்மர் 2 முறை ஆஸ்கர் விருதும், 4 கிராமிய விருதுகளை  வென்றவர். 1980 முதல் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.