திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: சனி, 13 டிசம்பர் 2025 (12:06 IST)

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்
தமிழ் சினிமாவில் மிகவும் போற்றத்தக்க நடிகராக இருப்பவர் நடிகர் சிவக்குமார். என்றும் மார்க்கண்டேயன் என்று இவரை அழைப்பார்கள். 80 வயது மேலாகியும் இன்னும் அவருடைய இளமை குறையாமல் யோகா செய்வது, ஓவியம் வரைவது, பட்டிமன்றங்கள் பேசுவது, மேடைகளில் பேசுவது என தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜெயலலிதா பற்றி சிவகுமார் பகிர்ந்த ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஜெயலலிதாவுடன் கந்தன் கருணை படத்தில் ஒன்றாக நடித்தார் சிவக்குமார்.
 
அது மட்டுமல்ல இன்னும் ஒரு சில படங்களில் ஜெயலலிதா உடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அதன் பிறகு ஜெயலலிதாவை அவர் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டதாம். கிட்டதட்ட ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு கிடைத்திருக்கிறது. அதுவும் தன்னுடைய மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைக்க ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறார் சிவக்குமார். அப்போது ஜெயலலிதா சிவகுமாரை பார்த்து, சாரி உங்களுடைய திருமணத்திற்கு தான் என்னால் வர முடியவில்லை. உங்களுடைய மகள் திருமணத்திற்கு கண்டிப்பாக வருவேன் என கூறினாராம்.
 
இதைப்பற்றி சிவக்குமார் கூறும் பொழுது அவர் சாரி கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. கிட்டத்தட்ட என்னுடைய திருமணம் 1974 இல் நடந்தது. அதன் பிறகு 2006 இல் அவரை நான் சந்திக்கிறேன். அத்தனை வருடங்கள் என்னுடைய திருமணத்திற்கு வர முடியவில்லை என்பதை ஞாபகம் வைத்து கூறியது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய மகள் திருமணத்தை காலை 5.30 மணி முகூர்த்தத்தில் வைத்திருந்தேன். ஜெயலலிதா 3 மணிக்கு எல்லாம் எழுந்து கிளம்பி என்னுடைய மகள் திருமணத்திற்கு வந்து விட்டார். அதற்கு காரணம் என்னுடைய மகள் திருமணம் கொங்குநாடு முறைப்படி நடந்தது.
 
அந்த திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்பட்டார். கொங்கு முறைப்படி எப்படி நடத்துகிறார்கள் என்பதை நான் பார்க்க வேண்டும். அதனால் கண்டிப்பாக அதிகாலையிலேயே வந்து விடுவேன் என கூறி இருந்தாராம் ஜெயலலிதா. அதைப்போல முகூர்த்ததிற்கு முன்பாகவே மண்டபத்திற்கு போய்விட்டாராம் ஜெயலலிதா. சரி சீக்கிரம் வந்து விட்டாரே, மந்திரத்தை சீக்கிரம் சொல்லுங்கள், ஜெயலலிதா காத்துக் கொண்டிருக்கிறார் என சிவகுமார் சொல்ல அதற்கு ஜெயலலிதா இல்லை அவர்கள் எப்படி எல்லாம் மந்திரம் ஓதுகிறார்கள் என்பதை பார்க்கவே நான் வந்திருக்கிறேன்.
 
அவசரம் இல்லை என பொறுமையாக இருந்து மகள் திருமணத்தை பார்த்து விட்டு தான் போனாராம் ஜெயலலிதா. அதைப்போல கார்த்தி திருமணம், சூர்யா திருமணம் என அனைத்து திருமண நிகழ்வுகளிலும் ஜெயலலிதா வந்துவிட்டார் என பெருமையாக கூறினார் சிவக்குமார். இதில் கார்த்தி திருமணத்திற்கு ஜெயலலிதாவால் வர முடியவில்லை. அதனால் மறுநாள் காலை சிவகுமார் வீட்டிற்கு நேரே சென்று கார்த்தியையும் அவருடைய மனைவியையும் வாழ்த்தினாராம்